சிறுவனை மனிதாபிமானமற்ற முறையில் தாக்கி கொடுமைப்படுத்திய சம்பவம் தொடர்பில் நான்கு பெண் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக அரநாயக்க பொலிஸார் தெரிவித்துள்ளனர்.குறித்த சம்பவத்தின் காணொளி ஒன்று சமூக ஊடகங்களில் அண்மையில் வைரலாக பரவியதையடுத்து, இது தொடர்பான விசாரணைகளை அடுத்து, சம்பந்தப்பட்ட சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.இதன்படி, குழந்தையை தாக்கிய குற்றச்சாட்டின் பேரில் குழந்தையின் இரு பாட்டிகளும் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சம்பவத்திற்கு உதவிய குற்றச்சாட்டில் அவரது தாயார் மற்றுமொரு பெண்ணுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.கைது செய்யப்பட்ட நான்கு சந்தேக நபர்களும் அரநாயக்க பிரதேசத்தில் வசிப்பவர்கள் மற்றும் 42 முதல் 78 வயதுடையவர்கள்.
சந்தேகநபர்களை இன்று (17) மாவனல்லை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த உள்ளதாகவும், தந்தையின் பராமரிப்பில் உள்ள குழந்தையை மாவனல்லை நீதி மருத்துவ அதிகாரி (JMO) முன்னிலையில் ஆஜர்படுத்த உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.சம்பவம் தொடர்பில் அரநாயக்க பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்