குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் கடவுச்சீட்டுகளை வழங்குவதற்கான செயல்முறையை நெறிப்படுத்தவும் விண்ணப்பதாரர்களின் நன்மைக்காகவும் புதிய வழிமுறையை அறிமுகப்படுத்தியுள்ளது.
அதன்படி, புதிய கடவுச்சீட்டுகளுக்கு விண்ணப்பிப்பதற்காக விண்ணப்பதாரர்கள் www.immigration.gov.lk என்ற இணையத்தளத்தின் ஊடாக முன்கூட்டியே பதிவு செய்ய வேண்டும்.ஒன்லைனில் பதிவு செய்ததன் பின்னர் முன்னுரிமை முறையின் படி கடவுச்சீட்டுகள் வழங்கப்படும் என குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.இது தொடர்பான புதிய முறை எதிர்வரும் வெள்ளிக்கிழமை (19) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது.