இன்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில், லாஃப்ஸ் சமையல் எரிவாயுவின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய 12.5 கிலோகிராம் நிறையுடைய லாஃப்ஸ் எரிவாயு கொள்கலனின் விலை 420 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.இதன்படி, அதன் புதிய விலை 4,100 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.அத்துடன், 5 கிலோகிராம் நிறையுடைய லாஃப்ஸ் சமையல் எரிவாயு கொள்கலன் ஒன்றின் விலை 168 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.இதற்கமைய, அதன் புதிய விலை 1,645 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக லாஃப்ஸ் சமையல் எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளது.