மேல், மத்திய, சப்ரகமுவ,தென், ஊவாமற்றும்வடமேல்மாகாணங்களில்மாலையில்அல்லதுஇரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.மேல், சப்ரகமுவமற்றும் மத்திய மாகாணங்களில்சில இடங்களில் 75 மி.மீஅளவானஓரளவு பலத்தமழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில்சில இடங்களில் காலை வேளையிலும் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவாமாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும்சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில்தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும்.மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையானமுன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.