இலங்கை இராணுவத்தின் 25ஆவது இராணுவ தளபதியாக மேஜர் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ இன்று நியமிக்கப்படவுள்ளதாக இலங்கை இராணுவம் தெரிவித்துள்ளது.தற்போதைய இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் விகும் லியனகேவின், சேவை நீடிப்பு நாளையுடன் நிறைவடைய உள்ளது. முன்னதாக, அவருக்கு இரண்டு தடவைகளில் சேவை நீடிப்பு வழங்கப்பட்டிருந்தது.
புதிய இராணுவ தளபதியாக நியமிக்கப்படவுள்ள மேஜர் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ பாதுகாப்பு படைகளின் துணைப் பிரதானியாகவும் கடமையாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.