Monday, February 24, 2025
Homeஇலங்கைஇலங்கையில் அதிரடியாக செயற்பட்டு இளைஞனை காப்பாற்றிய வெளிநாட்டுப் பெண்

இலங்கையில் அதிரடியாக செயற்பட்டு இளைஞனை காப்பாற்றிய வெளிநாட்டுப் பெண்

இலங்கையில் வெளிநாட்டுப் பெண் ஒருவர் அதிரடியாக செயற்பட்டு இளைஞனை காப்பாற்றிய சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.ஊவா மாகாணத்திலுள்ள தியலும நீர்வீழ்ச்சியில் குளித்துக் கொண்டிருந்த போது நீரில் மூழ்கிய இளைஞனையே, மலேசிய சுற்றுலாப் பயணி காப்பாற்றியுள்ளார்.இலங்கையில் விடுமுறைக்கு வந்த Farah Putri Mulyani என்ற பெண் அதிரடியாக செயற்பட்டு, இளைஞனை காப்பாற்றியுள்ளார்.சுற்றுலாப் பயணியின் தனிப்பட்ட கமராக்களில் பதிவான வீடியோ காட்சிகளில், ஆழமான பகுதியில் இறங்கிய நண்பரை மீட்க உதவி கேட்டு நண்பர்கள் கூச்சலிடும் காட்சிகள் பதிவாகி உள்ளன.அருகில் இருந்த பெண் சுற்றுலாப் பயணி நீருக்கு சென்று மூழ்கிய இளைஞனை உயிருடன் கரைக்கு கொண்டு வந்துள்ளார்.அதன் பின்னர் அவர் தனது நண்பர்களால் அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.நீர்வீழ்ச்சி ஆபத்துக்கள் குறித்து அவதானமாக இருக்குமாறு, பொது மக்களிடம் மலேசிய சுற்றுலாப் பயணி Farah Putri Mulyani என்ற பெண் கோரிக்கை விடுத்துள்ளார்

இதையும் படியுங்கள்:  யாழ். பல்கலைக்கழக மாணவர்களின் உண்ணாவிரல போராட்டத்துக்கு ஊழியர் சங்கமும் ஆதரவு
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments

error: Content is protected !!