Saturday, February 22, 2025
Homeஇலங்கைஇலங்கையில் கடைகளில் தண்ணீர் போத்தல் கொள்வனவு செய்யும் மக்களுக்கு எச்சரிக்கை

இலங்கையில் கடைகளில் தண்ணீர் போத்தல் கொள்வனவு செய்யும் மக்களுக்கு எச்சரிக்கை

இலங்கை தர நிர்ணய நிறுவனத்தின் அங்கீகாரம் இல்லாமல் SLS இலச்சினையை பயன்படுத்தி தண்ணீர் போத்தல்கள் தயாரித்து விற்பனை செய்யப்படுவதாக தெரியவந்துள்ளது.இதனால் வெயில் காலங்களில் கடைகளில் தண்ணீர் போத்தல்கள் கொள்வனவு செய்யும் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அவ்வாறு தயாரித்து, விற்பனை செய்து, சேமித்து வைத்திருந்த பூகொட தங்கல்ல பகுதியில் உள்ள தண்ணீர் போத்தல் உற்பத்தி நிலையம் ஒன்று சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.நேற்று கிட்டத்தட்ட 7000 தண்ணீர் போத்தல்கள் அழிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டதாக நுகர்வோர் விவகார அதிகாரசபையின் மூத்த புலனாய்வு அதிகாரி பி.எஸ். சி.பி. பெரேரா தெரிவித்தார்.பூகொட நீதவான் நீதிமன்றத்திலிருந்து பெறப்பட்ட உத்தரவின் அடிப்படையில், நீதித்துறை அதிகாரிகளின் மேற்பார்வையின் கீழ் இந்த தண்ணீர் போத்தல்களை அழிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.இது தொடர்பாக கைது செய்யப்பட்ட தண்ணீர் போத்தல் உற்பத்தி நிறுவனத்தின் மூன்று அதிகாரிகளுக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டதாகவும் அவர் மேலும் கூறினார்.

இதையும் படியுங்கள்:  இலங்கை கடற்படையால் 8 தமிழக மீனவர்கள் கைது
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments

error: Content is protected !!