இலங்கையில் 28.4% பாடசாலை மாணவர்கள் ஸ்மார்ட் கையடக்க தொலைப்பேசிகளைப் பயன்படுத்துவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.சமீபத்தில் வெளியிடப்பட்ட உலகளாவிய பாடசாலை சார்ந்த மாணவர் சுகாதார கணக்கெடுப்பு அறிக்கையினூடாக குறித்த விடயம் தெரியவந்துள்ளது.இதில் 31.3 சதவீதமானோர் சிறுவர்கள் எனவும் மீதமுள்ளவர்களில் 25.5 சதவீதமானோர் பெண்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.அத்துடன் ஸ்மார்ட் கையடக்க தொலைபேசிகளைப் பயன்படுத்துபவர்களில் பெரும்பாலோர் 16-17 வயதுக்குட்பட்டவர்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.மேலும் நாட்டில் கடந்த 12 மாதங்களில் 5.4% பாடசாலை மாணவர்கள் சைபர் மிரட்டலுக்கு ஆளாகியுள்ளனர் என்பதைக் கணக்கெடுப்பு அறிக்கை மேலும் வெளிப்படுத்தியுள்ளது.அவர்களில், 13-15 வயதுடைய சிறுவர்களில் 5.6% பேர் சைபர் தாக்குதலுக்கு ஆளாகின்றனர், மேலும் பெண் குழந்தைகளை விட சிறுவர்கள் சைபர்தாக்குதலுக்கு ஆளாகும் வாய்ப்பு அதிகம் என்பது கண்டறியப்பட்டுள்ளது.