யாழ். மாவட்ட தாச்சி விளையாட்டு சங்கத்திற்கு ஈழ மக்கள் ஜனநாய கட்சியின் செயலாளர் நாயகமும் முன்னாள் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தாவினால் சீருடைகள் வழங்கிவைக்கப்பட்டுள்ளது.முன்பதாக குறித்த யாழ். மாவட்ட தாச்சி விளையாட்டு சங்கத்தினர் முன்னாள் அமைசர் டக்ளஸ் தேவானந்தாவிடம் தமது சங்கத்திற்கு சீருடைகளை பெற்றுத்தருமாறு கோரிக்கை விடுத்திருந்தனர்.இதனடிப்படையில் விடுக்கப்பட்டிருந்த கோரிக்கைக்கு அமைவாக கடந்த 2024 ஆம் ஆண்டுக்கான பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டின் ஊடாக குறித்த சங்கத்திற்கு இரண்டு இலட்சம் ரூபாய் நிதியினை முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஒதுக்கீடு செய்திருந்தார்.குறித்த நிதி ஊடாக கொள்முதல் செய்யப்பட்ட சங்கத்தின் அடையாளம் பொறிக்கப்பட்ட (ரீ சோட்) சீருடைகள் இன்றையதினம்(23.03.2025) செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவினால் குறித்த சங்கத்தின் மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்து வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பத்தக்கது