உடுப்பிட்டி மதுபானம் சாலை தொடர்பான வழக்கு எதரிர்வரும் 06/03/2025 க்கு தவணை
யிடப்பட்டுள்ளது.உடுப்பிட்டி பகுதியில் திறக்கப்பதத்டுள்ள மதுபானச் சாலையை அகற்றக்கோரி பிரதேச மக்களால் தொடரப்பட்ட வழக்கு இன்றைய தினம் பருத்தித்துறை நீதிமன்றில் இடம் பெற்றது.இந்நிலையில் ஜனாதிபதி சட்டத்தரணி எம் ஏ சுமந்தின் குறித்த வழக்கில் ஆஜராகியிருந்தார்.குறித்த வழக்கு எதிர்வரும் 06/03/2025 க்கு தவணையிடப்பட்டுள்ளது.பருத்தித்துறையில் மரக்கறி வியாபாரிகளால் மரக்கறி சந்தையை புதிய இடத்திற்க்கு மாற்றுவதை எதிராக தொடர்ப்பட்ட வழக்கு இன்று அழைக்கப்பட்டிருந்த நிலையில் குறித்த வழக்கு எதிர்வரும் 07/02/2025 க்கு தவணையிடப்பட்டுள்ளது. இவ்வழக்கில் வழக்கு தொடருனர்கள் சார்பில் சிரேஸ்ர சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் ஆஜராகியிருந்தார். குறித்த மரக்கறி சந்தை தொடர்பான வழக்கு எதிர்வரும் 31/01/2025 அன்று தவணையிடப்பட்டிருந்த நிலையில் நகர்த்தல் பத்திரம் மூலம் இன்று இடம் பெற்றிருந்தது.