Saturday, March 29, 2025
Homeஇலங்கைஉள்ளூராட்சி மன்ற தேர்தல் ஈ.பி.டி.பியின் வெற்றிக்கான பொறிமுறைகள் குறித்து ஈ.பி.டி.பி விசேட கலந்துரையாடல்

உள்ளூராட்சி மன்ற தேர்தல் ஈ.பி.டி.பியின் வெற்றிக்கான பொறிமுறைகள் குறித்து ஈ.பி.டி.பி விசேட கலந்துரையாடல்

நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபை தேர்தலில், ஒவ்வொரு சபைகளிலும் அதிகளவான ஆசனங்களை பெற்றுக்கொள்வதாகவே எமது முயற்சிக்கள் இருக்க வேண்டும் என தெரிவித்த ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா,
காலச் சூழலுக்கு ஏற்ப அரசியல் களமும் அதற்கான முடிவுகளும் இருப்பதும் அவசியம் என்றும் தெரிவித்துள்ளார்.நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தல் ஈ.பி.டி.பியின் வெற்றிக்கான பொறிமுறைகள் குறித்து கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் கட்சியின் தலைமை காரியாலயமான ஸ்ரீதரில் விசேட கலந்துரையாடல் இன்றையதினம் (22) நடைற்றது. யாழ். மாவட்டத்தில் உள்ள 17 உள்ளூராட்சி மன்றங்களுக்கான வேட்பாளர்களுள் ஒரு பகுதியினர், கட்சியின் யாழ் மாவட்ட அமைப்பாளர்கள் மற்றும் முக்கியஸ்தர்கள் செயற்பாட்டாளர்கள் பிரசன்னத்துடன் குறித்த கலந்துரையாடல் இடம்பெற்றது.
இதன்போது குறிப்பாக யாழ்ப்பாணம் மாவட்டத்தின் உள்ளூராட்சி மன்றங்களின் தேர்தல் பிரசார அரசியல் செயற்பாடுகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டது.

இதன்போது இவ்வாறு கூறிய அவர் மேலும் கூறுகையில் –

கடந்த எமது ஆட்சியில் வாயைக் வயிற்றைக் கட்டி சேமித்த பணத்தையே தற்போதைய ஆட்சியாளர்களினால் தங்களின் பொருளாதார மீட்சியாக காட்சிப்படுத்தப்படுகிறது என்று தெரிவித்த டக்ளஸ் தேவானந்தா, கொடுத்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்ற முடியாத ஆட்சியாளர்கள் மேலும் புழுகு மூட்டைகளுடன் உள்ளூராட்சி தேர்தலுக்கு தயாராகி வருவதாகவும் தெரிவித்தார்.மேலும், உண்மையான தமிழ் தேசியத்தினை பாதுகாக்கும் யதார்த்தமான தரப்பாக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியே செயற்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.குறிப்பாக தற்போது கடந்த காலங்களைப் போலல்லாது அரசியல் தளம் மாற்றமடைந்துள்ளது.
இது தமிழ் தரப்பினரின் அரசியல் களத்தில் தீர்க்கமான முடிவுகளை எடுக்கவேண்டிய சூழலையும் உருவாகியுள்ளது எனவும் தெரிவித்தார்.
உள்ளூராட்சி மன்ற தேர்தல் ஈ.பி.டி.பியின் வெற்றிக்கான பொறிமுறைகள் குறித்து ஈ.பி.டி.பி விசேட கலந்துரையாடல்
உள்ளூராட்சி மன்ற தேர்தல் ஈ.பி.டி.பியின் வெற்றிக்கான பொறிமுறைகள் குறித்து ஈ.பி.டி.பி விசேட கலந்துரையாடல்
உள்ளூராட்சி மன்ற தேர்தல் ஈ.பி.டி.பியின் வெற்றிக்கான பொறிமுறைகள் குறித்து ஈ.பி.டி.பி விசேட கலந்துரையாடல்
உள்ளூராட்சி மன்ற தேர்தல் ஈ.பி.டி.பியின் வெற்றிக்கான பொறிமுறைகள் குறித்து ஈ.பி.டி.பி விசேட கலந்துரையாடல்

இதையும் படியுங்கள்:  இத்தாலி பிரஜை செய்த முறைப்பாடு
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments

error: Content is protected !!