ஒரே பிரசவத்தில் நான்கு குழந்தைகளைப் பெற்றெடுத்த தாய்

ஒரு குழந்தை என்பது பெற்றோருக்கு இருக்கும் மிகப்பெரிய மகிழ்ச்சிகளில் ஒன்றாகும்.அதிலும், இரட்டைக் குழந்தைகள் பிறப்பது என்பது பெற்றோரின் மகிழ்ச்சியை இரட்டிப்பாக்குவதும், மும்மடங்காக்குவதும் ஆகும்.
அதன்படி, அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் இருந்து “அத தெரண”வுக்கு பெண்ணொருவர் நான்கு குழந்தைகளை பிரசவித்த சம்பவமொன்று தெரியவந்துள்ளது.அனுராதபுரத்தைச் சேர்ந்த 28 வயதுடைய பெண் ஒருவரே இந்த அதிர்ஷ்டமான நான்கு குழந்தைகளைப் பெற்றெடுத்ததாகக் கூறினார்.பல வருடங்களாக குழந்தை பிறப்பதில் தாமதம் ஏற்பட்டதையடுத்து, அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் இந்த நான்கு குழந்தைகளைப் பெற்றெடுத்தார்.அநுராதபுரம் போதனா வைத்தியசாலையின் விசேட வைத்தியர்கள் மற்றும் தாதி உத்தியோகத்தர்கள் தாயாருக்கு நான்கு பிள்ளைகள் இருப்பது கண்டறியப்பட்ட தருணத்தில் இருந்து சுகப்பிரசவத்திற்காக கடுமையாக உழைத்து வந்துள்ளனர்.எனினும், சிசேரியன் மூலம் பிறந்த இந்த குழந்தைகள் தற்போது குறைமாத குழந்தை பிரிவில் நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் தாயின் உடல்நிலையும் நன்றாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.அநுராதபுரம் போதனா வைத்தியசாலைக்கு முதற்தடவையாக நான்கு குழந்தைகளின் பிறப்பு பதிவாகியுள்ளமையால் இதுவும் மிக முக்கியமான நிகழ்வாக பார்க்கப்படுகிறது.


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here