Sunday, January 12, 2025
Homeஇலங்கைகடவுச்சீட்டு தரவரிசையில் இலங்கைக்கு 96வது இடம்

கடவுச்சீட்டு தரவரிசையில் இலங்கைக்கு 96வது இடம்

2025 ஆம் ஆண்டுக்கான கடவுச்சீட்டு தரவரிசையில் உலகின் மிகவும் சக்திவாய்ந்த கடவுச்சீட்டு என்ற பட்டத்தை சிங்கப்பூர் மீண்டும் பெற்றுள்ளது.சிங்கப்பூர் கடவுச்சீட்டு வைத்திருப்பவர்கள் உலகளவில் 195 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணிக்கலாம்.ஜப்பான் இரண்டாவது இடத்தில் உள்ளது.இந்த பட்டியலில் இலங்கை 96வது இடத்தை பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.சர்வதேச விமானப் போக்குவரத்து சங்கத்தின் (IATA) பிரத்யேக தரவுகளைப் பயன்படுத்தி விசா இல்லாமல் அணுகக்கூடிய இடங்களின் எண்ணிக்கையை அடிப்படையாகக் கொண்டு இந்த பட்டியல் தயாரிக்கப்படுகிறது.

டாப் 10 வலிமையான கடவுச்சீட்டு உள்ள நாடுகள்:

1. சிங்கப்பூர் (195 இடங்கள்)
2. ஜப்பான் (193 இடங்கள்)
3. பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஸ்பெயின், பின்லாந்து, தென் கொரியா (192 இடங்கள்)
4. ஆஸ்திரியா, டென்மார்க், அயர்லாந்து, லக்சம்பர்க், நெதர்லாந்து, சுவீடன், நார்வே (191 இடங்கள்)
5. பெல்ஜியம், நியூசிலாந்து, போர்ச்சுகல், சுவிட்சர்லாந்து, யுனைடெட் கிங்டம் (190 இடங்கள்)
6. கிரீஸ், ஆஸ்திரேலியா (189 இடங்கள்)
7. கனடா, போலந்து, மால்டா (188 இடங்கள்)
8. ஹங்கேரி, செக்கியா (187 இடங்கள்)
9. எஸ்டோனியா, அமெரிக்கா (186 இடங்கள்)
10. லிதுவேனியா, லாட்வியா, ஸ்லோவேனியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (185 இடங்கள்)

இதையும் படியுங்கள்:  மோசடியில் ஈடுபடும் குழு பாஸ்மதி அரிசியைப் போன்ற ஒரு வகை அரிசி குறைந்த விலையில் நாட்டிற்கு இறக்குமதி
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments

error: Content is protected !!