Monday, February 24, 2025
Homeஇலங்கைகணேமுல்ல சஞ்சீவ கொலை - உதவி கோரும் பொலிஸார்

கணேமுல்ல சஞ்சீவ கொலை – உதவி கோரும் பொலிஸார்

கணேமுல்ல சஞ்சீவவை சுட்டுக் கொன்ற சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வரும் பெண் சந்தேக நபரின் மேலும் பல புகைப்படங்களை பொலிஸார் ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ளனர்.கடந்த 19 ஆம் திகதி காலை, புதுக்கடை 5ஆம் இலக்க நீதவான் நீதிமன்றத்திற்குள், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலின் தலைவரான கணேமுல்ல சஞ்சீவ என்ற சஞ்சீவ குமார சமரரத்ன சுட்டுக் கொல்லப்பட்டார்.இதன்போது துப்பாக்கிச் சூடு நடத்தியவருக்கு உதவிய மற்றும் உடந்தையாக இருந்த சந்தேகநபரை அடையாளம் காண பொதுமக்களின் உதவியை கோரி, பொலிஸார் இந்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளனர்.

995892480V தேசிய அடையாள அட்டை எண்ணை கொண்ட 25 வயதான பிங்புர தேவகே இஷாரா செவ்வந்தி என்ற சந்தேகநபர், 243/01, நீர்கொழும்பு வீதி, ஜயா மாவத்தை, கட்டுவெல்லேகமவில் 25 வருடங்களாக வசிப்பவர் என தெரியவந்துள்ளது.சந்தேக நபரை அடையாளம் காண்பதற்காக விசாரணை அதிகாரிகள் அவரது பல சமீபத்திய புகைப்படங்களை கண்டறிந்துள்ளனர். அதன்படி, குறித்த கொலை தொடர்பில் கொழும்பு குற்றவியல் பிரிவு விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.மேற்கண்ட பெண் சந்தேகநபர் தொடர்பான தகவல் தெரிந்தவர்கள் பின்வரும் தொலைபேசி எண்களைத் தொடர்பு கொள்ளுமாறு பொலிஸார் கோரியுள்ளனர்.

கொழும்பு குற்றவியல் பிரிவின் பணிப்பாளர் – 071 8591727 கொழும்பு குற்றவியல் பிரிவு பொறுப்பதிகாரி – 071 891735 இந்த சந்தேக நபர் பற்றிய தகவல்களை வழங்குபவர்களுக்கு பொலிஸ் வெகுமதி நிதியிலிருந்து பணப்பரிசு வழங்க பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய முடிவு செய்துள்ளார். அத்துடன் தகவல்களை வழங்குபவர்களின் இரகசியத்தன்மையைப் பாதுகாக்க நடவடிக்கை எடுப்பதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இதையும் படியுங்கள்:  கடவுளின் சிலையில் இருந்து நீர் கசிந்தது தொடர்பில் பங்குத் தந்தை கருத்து
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments

error: Content is protected !!