மட்டக்களப்பு – வெல்லாவெளி போரதீவுப்பற்று பகுதியில் கால்வாயொன்றுக்கு விழுந்து ஒன்றரை வயதுடைய குழந்தை ஒன்று உயிரிழந்ததாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.போரதீவுபற்று இளைஞர் விவசாயத்திட்டத்தை சேர்ந்த ஒன்றரை வயதுடைய ஆண் குழந்தையொன்றே இவ்வாறு, தமது வீட்டுக்கு அருகிலுள்ள கால்வாயில் விழுந்துள்ளது.இதனையடுத்து குழந்தையை மீட்டு பழுகாமம் பிரதேச வைத்தியசாலைக்குக் கொன்று சென்ற போதிலும் குழந்தை ஏற்கனவே உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.குழந்தையின் சடலம் பிரேத பரிசோதனைக்காக களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டதுடன், மேலதிக விசாரணைகளை வெல்லாவெளி காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.