கிளிநொச்சி மாவட்ட மக்கள் சமூக அமைப்பின் ஏற்பாட்டில் சுதந்திர தின நிகழ்வு ஒன்று இன்று கிளிநொச்சி பசுமைப்பூங்காவில் இடம்பெற்றது.குறித்த நிகழ்வு இன்று காலை 10.30 மணியளவில் ஆரம்பமானது. நிகழ்வில் 400க்கு மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டனர்.அனைத்து இன மதங்களையும் ஒன்றிணைக்கும் வகையில் தேசியக்கொடியினை சர்வ மதத் தலைவர்கள் இணைந்து ஏற்றி வைத்ததை தொடர்ந்து தேசிய கீதம் இசைக்கப்பட்டது.தொடர்ந்து சுதந்திர தின நிகழ்வுகள் சர்வமத பிரார்த்தனையுடன் இடம்பெற்றதுடன், இரத்ததானமும் இடம்பெற்றது.