கேகாலையில் காணி தகராறு காரணமாக மூதாட்டி ஒருவரை கல்லால் அடித்து கொலை செய்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.உயிரிழந்தவர் கேகாலை – திவுல பகுதியை சேர்ந்த 80 வயது மூதாட்டி என தெரியவந்துள்ளது. கடந்த ஜனவரி மாதம் 8 ஆம் திகதி இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதுடன்.அதன் பின்னர் சுமார் 2 மாதங்களாக கேகாலை போதனா வைத்தியசாலையில் குறித்த மூதாட்டி சிகிச்சை பெற்று வந்துள்ளார்.பின்னர், அவர் நேற்று (02) காலமானதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளனர்.கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கேகாலை புஸ்ஸல்லா பகுதியைச் சேர்ந்த 46 வயதுடையவர் ஆவார்.