மஹவ – அநுராதபுரம் வரையிலான புகையிரத பாதை அபிவிருத்தி காரணமாக தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்த கொழும்பு – தலைமன்னார் புகையிரத சேவை செவ்வாய்க்கிழமை முதல் மீள ஆரம்பிக்கப்படும் என புகையிரத திணைக்களம் அறிவித்துள்ளது.இதற்கமைய கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தில் இருந்து செவ்வாய்க்கிழமை (12) பிற்பகல் 04.15 மணிக்கு புறப்படும் புகையிரதம் செவ்வாய்க்கிழமை (12) இரவு 10.15 மணியளவில் தலைமன்னாரை சென்றடையும்.அதேபோல் புதன்கிழமை (13) தலைமன்னாரிலிருந்து காலை 04.15 மணிக்கு புறப்படும் புகையிரதம் காலை 10.15 மணியளவில் கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தை வந்தடையும்