கொழும்பு துறைமுகத்திற்கு கிடைத்துள்ள அங்கீகாரம்

2024 ஆம் ஆண்டில் 23.6% எனும் வேகமான வளர்ச்சி விகிதத்தைப் பதிவுசெய்ததன் மூலம் கொழும்பு துறைமுகம் செயல்பாட்டுச் செயல்திறனில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்துள்ளது.கப்பல் துறையின் முன்னணி ஆராய்ச்சி வெளியீடான Alphaliner, உலகின் வேகமாக வளரும் துறைமுகமாக கொழும்பு துறைமுகத்தை முதல் காலாண்டில் குறிப்பிட்டுள்ளதாக கப்பற்றுறை மற்றும் விமான சேவைகள் அமைச்சின் செயலாளர் கே. டி. எஸ்.ருவன்சந்திர தெரிவித்தார்.அத்துடன், 2024ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் கொழும்பு துறைமுகம்,50 மில்லியன் அமெரிக்க டொலர் வருமானத்தை ஈட்டியுள்ளதாக சுட்டிக்காட்டிய அவர், கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு தொழிற்சங்க நடவடிக்கைகள் அந்த முன்னேற்றத்தை எட்டுவதற்குத் தடையாக அமையவில்லை எனவும் செயலாளர் தெரிவித்தார்.இரண்டு வருட முன்னேற்றம் தொடர்பில் ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று (29) நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே துறைமுகங்கள், கப்பற்றுறை மற்றும் விமான சேவைகள் அமைச்சின் செயலாளர் கே. டி.எஸ்.ருவன்சந்திர இதனைக் குறிப்பிட்டார்.


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here