யாழ் வடமராட்சி கிழக்கு மருதங்கேணி,தாளையடியில் வருகின்ற 12.02.2025 ம் திகதி சமூக மாற்றத்திற்கான ஊடக மையம் வைபவ ரீதியாக ஆரம்பித்துவைக்கப்படவுள்ளது.உலகெங்கும் வாழும் அனைத்து ஊடகவியலாளர்களையும் ஒன்று திரட்டி சர்வதேச ரீதியில் இந்த ஊடக மையம் செயற்படவுள்ளது.சமூக மாற்றம் மூலமே குற்றமற்ற சுதந்திரமான தேசத்தை கட்டியெழுப்பி சுதந்திரக் காற்றை சுவாசிக்க முடியும் என்ற கோட்பாட்டுடன் சமூக மாற்றத்திற்கான ஊடக மையம் தனது செயற்பாட்டை சர்வதேச ரீதியில் ஆரம்பிக்கவுள்ளது.
இலங்கையில் காணப்படும் அனைத்து ஊடகங்களையும்,ஊடகவியலாளர்களையும் ஒருகுடையின் கீழ் ஒன்று சேர்த்து சமூக மாற்றத்திற்கான ஊடக அமைப்பாக விரிவு படுத்தப்பட்டுள்ளது.சமூக மாற்றத்திற்கான ஊடக ஆரம்ப நிகழ்வில் கலந்து கொள்ளுமாறு சர்வதேச ரீதியாக அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.