சிறுவர்களுக்கு ஏற்படும் இன்புளுவென்சா வைரஸ் காய்ச்சலினை தொடர்ந்து சிறுவர்கள் மத்தியில் தற்போது மூச்சுத்திணறல் அறிகுறிகள் அதிகரித்து வருவதாக வைத்திய நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். காய்ச்சல் இரண்டு நாட்களுக்கு மேல் நீடிக்குமாயின் உடனே அருகில் உள்ள வைத்தியரை நாடி ஆலோசனைகளைப் பெற்றுக் கொள்ளுமாறும் குறிப்பிடப்பட்டுள்ளது.