சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய உணவகங்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை

சுகாதார சீர்கேட்டுடன் இயங்கியதாகக் கூறப்படும் உணவகம் ஒன்றிற்கு எதிராக பொதுச் சுகாதார பரிசோதகர்கள் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் நேற்று (21) வழக்கு தாக்கல் செய்துள்ளனர்.கொழும்பு நகரத்தில் உள்ள தோசை விற்பனை செய்யும் உணவகம் ஒன்றிற்கு எதிராகவே இவ்வாறு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.இந்த உணவகத்தில் பணிபுரிபவர்கள் மேலாடை இன்றி சுகாதார சீர்கேட்டுடன் தோசைகளைத் தயாரித்துள்ளதாக பொதுச் சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய பல்வேறு உணவகங்களுக்கு எதிராக பொதுச் சுகாதார பரிசோதகர்கள் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்துள்ளனர்.அதன்படி, மனித பாவனைக்கு உதவாத பழுதடைந்த உணவுப் பொருட்களைப் பயன்படுத்தி உணவுகளைத் தயாரித்தல், உணவுகளில் பூச்சிகள் காணப்படல், அசுத்தமான முறையில் உணவு தயாரித்தல் உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களின் கீழ் இராஜகிரிய மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் உள்ள 06 உணவகங்களுக்கு எதிராக பொதுச் சுகாதார பரிசோதகர்களினால் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here