பேராதெனிய பொலிஸ் பிரிவில் உள்ள பால்பத்கும்புர பிரதேசத்தில் அமைந்துள்ள சூப்பர் மார்கட் இல் 650 ரூபா பெறுமதியான பொருட்களை திருடிய குற்றத்தில் பேராதனை பொலிஸில் இணைந்த நிலையம் ஒன்றில் கடமை புரியும் உப பொலிஸ் ஆய்வாளர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.சந்தேகத்திற்கு இடமான முறையில் கைது செய்யப்பட்ட இந்த உப போலீஸ் ஆய்வாளர் சூப்பர் மாக்கட்டில் பொருட்கள் வாங்கும் போது, ஒரு சிறிய தேயிலை பாக்கட் மற்றும் ஷாம்பு பாட்டிலை கொண்டு செல்ல முயன்ற போது, அந்த விற்பனைக் கடையில் இருந்த பாதுகாப்பு அதிகாரிகளால் பரிசோதனை செய்த நிலையில் பொருட்கள் சிக்கியுள்ளது.காவல் துறையினரால் கைது செய்யப்பட்ட உப பொலிஸ் ஆய்வாளர் ஓய்வுதியம் எடுக்க இன்னும் ஓரிரு வருடமே இருப்பதாக காவல்துறை அதிகாரி தெரிவித்தார்.