கடந்த சில தினங்களுக்கு முன்பாக அரியாலை – செம்மணி சித்தப்பாத்தி இந்து மயானத்தில் கண்டெடுக்கப்பட்ட மனித எச்சங்கள் தொடர்பான வழக்கானது இன்றையதினம் நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டது.நீதிவான் இன்றையதினம் மன்றுக்கு வருகை தராத காரணத்தினால் பதில் நீதிவான் இந்த வழக்கினை எடுத்திருந்தார். அந்தவகையில் இந்த வழக்கானது நாளையதினம் நீதிமன்ற எடுப்பதற்காக திகதியிடப்பட்டுள்ளது.அத்துடன் நாளையதினம் சட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கைகள் மன்றுக்கு சமர்ப்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.