யாழ்ப்பாணம் – செம்மணிப் பகுதியில் உள்ள மயானத்தில் கட்டடம் ஒன்று அமைப்பதற்காக கடந்த சில தினங்களுக்கு முன்னர் வெட்டப்பட்ட குழியில் இருந்து மனித எச்சங்கள் அடையாளம் காணப்பட்டன.இது குறித்து யாழ்ப்பாணம் மாநகர சபையின் முன்னாள் உறுப்பினரும், குறித்த மயானத்தின் நிர்வாக உறுப்பினருமான திரு.கிருபாகரன் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றினை பதிவு செய்துள்ளார். இந்நிலையில் பொலிசார் குறித்த விடயத்தை யாழ்ப்பாணம் நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றனர். அந்தவகையில் நாளையதினம் (20.02.2025) பி.ப 3.00 மணிக்கு குறித்த பகுதியை நீதிவான் பார்வையிடவுள்ளார்.