முறையான விசா ஆவணங்கள் இன்றி இலங்கையில் தங்கியிருந்த 6 வெளிநாட்டவர்களையும் சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட சிகரெட்டுகளை வைத்திருந்த வெளிநாட்டவர் ஒருவரையும் கட்டுநாயக்க பொலிஸார் கைது செய்துள்ளனர்.கட்டுநாயக்க ஆண்டியம்பலம பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் தங்கியிருந்த வெளிநாட்டவர்கள் தொடர்பில் கட்டுநாயக்க பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் நேற்று (11) பிற்பகல் மேற்கொள்ளப்பட்ட தேடுதலின் போதே இந்த வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சட்டவிரோதமான முறையில் இறக்குமதி செய்யப்பட்ட 1000 சிகரெட் குச்சிகளுடன் (50 பொதிகள்) வெளிநாட்டவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் 25, 26, 33, 38, 39 மற்றும் 42 வயதுடைய இந்தியர்கள் ஆவர்.மேலதிக விசாரணைகளை கட்டுநாயக்க பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.