நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை வெள்ளிக்கிழமை (20) விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாகவும் எதிர்வரும் திங்கட்கிழமை மீண்டும் பாடசாலைகள் திறக்கப்படும் என கல்வி அமைச்சு இன்று வியாழக்கிழமை (19)அறிவித்துள்ளது.நாளை மறுதினம் சனிக்கிழமை (21) நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு தேர்தல் ஆணைக்குழு விடுத்த கோரிக்கைக்கு அமைய இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.அதற்கிணங்க, வாக்களிப்பு நிலையங்களாகப் பயன்படுத்தப்படும் பாடசாலைகளை வியாழக்கிழமை (19) பாடசாலை நிறைவடைந்த பின்னர் குறிப்பிட்ட கிராம உத்தியோகத்தர்களிடம் கையளிக்குமாறு கல்வி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.
வாக்களிப்பு நிலைய நடவடிக்கைகளுக்கு தேவையான மேசைகள், கதிரைகள் மற்றும் மண்டப வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்குமாறு அனைத்து வலயக் கல்விப் பணிப்பாளர்களுக்கும் அதிபர்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளபடி, ஒவ்வொரு பாடசாலைக்கும் தொடர்புடைய காலப்பகுதியில் மாத்திரம் வாக்கு எண்ணும் நிலையங்களாகப் பயன்படுத்தப்படும் பாடசாலைகள் மூடப்படும் என அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.வாக்குகள் எண்ணப்படும் நிலையங்களாக பயன்படுத்தப்படும் பாடசாலைகள் என சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள ஒவ்வொரு பாடசாலையும் அந்தந்த காலப்பகுதியில் மட்டும் மூடப்படும் எனவும் அமைச்சு தெரிவித்துள்ளது.