டெலிகிராம் செயலி நிறுவனருக்குத் தடை

டெலிகிராம் செயலியின் நிறுவனர் பாவெல் துரோவை கடந்த 24ஆம் திகதி பிரான்ஸில் வைத்து அந்நாட்டுக் காவல்துறையினர் கைது செய்தனர்.செயலியின் மூலம் நடக்கும் சட்டவிரோதச் செயல்களுக்கு டெலிகிராம் துணை போவதாகவும், பயங்கரவாத செயல்களுக்கு ஆதரவளிப்பதாகவும், பயனர்களின் தரவுகளை அரசுகளிடம் இருந்து பாதுகாப்பதாகவும் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.அவரது கைதுக்குப் பல தரப்பிலிருந்து கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் பாவெல் துரோவ் மீதான குற்றச்சாட்டுகளை காவல்துறையினர் நீதிமன்றில் தாக்கல் செய்தனர். இதையடுத்து பாவெல் துரோவுக்கு பிணை வழங்கி நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

5 மில்லியன் யூரோக்கள் (இலங்கை மதிப்பில் ரூ.167 கோடி) பிணைத்தொகை செலுத்த உத்தரவிட்டனர். மேலும் அவர் நீதிமன்ற கண்காணிப்பின் கீழ் நாட்டில் இருக்க வேண்டும்.
பிரான்ஸை விட்டு வெளியேறக் கூடாது என்று நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. வாரத்திற்கு 2 முறை காவல்நிலையத்தில் முன்னிலையாக வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here