பூண்டுலோயா – டன்சினன் கீழ் பிரிவில், நடத்தப்பட்ட தாக்குதலில் 29 வயதான இளைஞர் ஒருவர் பலியானார். இந்த தாக்குதலை இறந்தவரின் தகப்பனாரும் அவரது மற்றுமொரு மகனும் மேற்கொண்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. உயிரிழந்தவரின் சடலம் கொத்மலை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.குறித்த தாக்குதலை நடத்திய குற்றச்சாட்டில் கைதான இருவரும் காவல்துறை பாதுகாப்புக்கு மத்தியில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.சம்பவம் தொடர்பான விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.