தனியார்த்துறையினரால் இதுவரை 75,000 மெற்றிக் டன் அரிசி இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.சந்தையில் நிலவும் அரிசி தட்டுப்பாடு காரணமாக அரிசியை இறக்குமதி செய்ய அரசாங்கம் தனியார் தரப்பினருக்கு அனுமதி வழங்க மேற்கொண்ட தீர்மானத்தின் பிரகாரம் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.இதன்படி, 32,000 மெற்றிக் டன் பச்சை அரிசியும், 43,000 நாடு அரிசியும் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக இலங்கை சுங்கம் தெரிவித்துள்ளது.எவ்வாறாயினும், தொடர்ந்தும் சந்தையில் பச்சை அரிசிக்கான தட்டுப்பாடு நிலவுகிறது.
அதேநேரம், சில வர்த்தகர்கள் கட்டுப்பாட்டு விலையை மீறி அரிசியை விற்பனை செய்வதாக நுகர்வோர் குற்றம் சுமத்துகின்றனர்.சில வர்த்தகர்கள் விலையைக் காட்சிப்படுத்தாது அரிசியை விற்பனை செய்வதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.