தனியார் துறை ஊழியர்களின் குறைந்தபட்ச மாதாந்த வேதனத்தை 27,000 ரூபாயாக உயர்த்துவதற்கான சட்டத் திருத்தங்களை அறிமுகப்படுத்தவுள்ளதாகத் தொழில் அமைச்சு அறிவித்துள்ளது.அமைச்சரவைக்குப் பரிந்துரைக்கப்பட்ட திருத்தங்கள் எதிர்வரும் மே மாதம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என அமைச்சின் செயலாளர் எஸ்.எம்.பியதிஸ்ஸ தெரிவித்தார்.தற்போது தனியார் துறை ஊழியர்களுக்கான குறைந்தபட்ச மாதாந்த வேதனம் 21,000 ரூபாயாக உள்ளது.அத்துடன் குறித்த வேதன அதிகரிப்பு இந்த ஆண்டுக்கான பாதீட்டுத் திட்ட முன்மொழிவுக்கு ஏற்ப உள்ளதாகவும் அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டார்.இந்த அதிகரிப்பைத் தொடர்ந்து, தனியார் துறை ஊழியர்களுக்கான குறைந்தபட்ச மாதாந்த வேதனம் அடுத்த ஆண்டு 35,000 ரூபாயாக உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தொழில் அமைச்சின் செயலாளர் உறுதிப்படுத்தியுள்ளார்