தனியார் துறை ஊழியர் குறைந்தபட்ச சம்பளம் ரூ. 25,000 வரை அதிகரிக்கப்படும்

எமது நாட்டின் பொருளாதார விருத்திக்கு பாரிய பங்களிப்பை வழங்குகின்ற தனியார் துறை ஊழியர்களுக்கான பலமான வேலைத் திட்டங்கள் குறித்து ஐக்கிய மக்கள் சக்தியின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.பொருளாதார விருத்திக்கு தனியார் துறையின் பங்களிப்பு மிகவும் முக்கியமானதாகும். தொழில் வழங்குனர்களின் முதலீட்டைப் போலவே ஊழியர்களும் மிகவும் சிரமத்துக்கு மத்தியில் பாரிய பணிகளை செய்து கொண்டிருக்கிறார்கள் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.அவர்கள் பணியிடத்தில் செய்கின்ற உன்னதமான பணிக்காக விஷேட திட்டங்கள் உண்டு. இதன் ஊடாக தனியார் துறையினரின் குறைந்தபட்ச சம்பளத்தை 25000 ரூபா வரை கொண்டு வருவதற்கான திட்டங்கள் வகுக்கப்படும். அத்தோடு ஊழியர்களின் உரிமைகளை பாதுகாக்கின்ற வகையிலான சேவை கொள்கையும் தயாரிக்கப்படும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

2024 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு ஐக்கிய மக்கள் சக்தி ஏற்பாடு ஏற்பாடு செய்கின்ற மக்கள் வெற்றிப் பேரணி கூட்டத்துடரின் 39 ஆவது பேரணி எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் காலியில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.ஐக்கிய மக்கள் சக்திக்கு தெளிவான கொள்கையும், தூரநோக்கு பார்வையும் உண்டு. ஐக்கிய மக்கள் சக்தியின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் தெரிவிக்கப்பட்ட பல விடயங்களை ஜனாதிபதி உள்ளிட்ட அரசாங்கம் SMS தகவல் ஊடாக அவற்றைச் செய்வதாக சொல்லுகின்றார்கள். அவர்கள் ஐக்கிய மக்கள் சக்தியின் அடிப்பாதையிலே சென்று கொண்டிருக்கிறார்கள் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் வெற்றி உறுதிப்படுத்தப்பட்டு இருக்கின்ற இந்த சந்தர்ப்பத்தில், மக்கள் விடுதலை முன்னணியும் ஜனாதிபதியும் ஒன்றாக இணைந்து பொய்யான தகவல்களையும் வதந்திகளையும் பரப்புகின்றார்கள். பேஸ்புக் ஊடாகவும் இணையதளங்களுக்கும் பணம் செலுத்தி ஐக்கிய மக்கள் சக்தியும் ஐக்கிய தேசியக் கட்சியும் ஒன்றாக இணையப் போகின்றார்கள் என்று பொய்யான செய்திகளை பரப்பிக் கொண்டிருக்கிறார்கள். ஐக்கிய மக்கள் சக்தி மக்களோடு மாத்திரமே இணைந்திருக்கும், மிகவும் மோசமான அளவில் வீழ்ச்சி அடைந்திருக்கிற ஊழல் அரசியல்வாதிகளுடன் கூட்டுச் சேர்வதில்லை என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here