Monday, March 3, 2025
Homeஇலங்கைதிருகோணமலைக்கு அப்பால் அமைந்துள்ள கடலில் நடுவே திடீர் சுகயீனமுற்ற மீனவரை மீட்ட கடற்படை

திருகோணமலைக்கு அப்பால் அமைந்துள்ள கடலில் நடுவே திடீர் சுகயீனமுற்ற மீனவரை மீட்ட கடற்படை

இலங்கைக்கு கிழக்கே, திருகோணமலைக்கு அப்பால் அமைந்துள்ள கடலில் நீண்டநாள் மீன்பிடி படகில் திடீர் சுகவீனமடைந்த உள்ளூர் மீனவர் ஒருவரை உடனடியாக கரைக்கு அழைத்துச் சென்று சிகிச்சைக்காக நேற்று (01) திருகோணமலை மாவட்ட பொது வைத்தியசாலைக்கு கடற்படையினர் அனுப்பி வைத்தனர். மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து 2025 மார்ச் 1ஆம் திகதி ஏழு (07) மீனவர்களுடன் புறப்பட்ட ‘Sadaru 03’ என்ற பலநாள் மீன்பிடிக் கப்பல், திருகோணமலையிலிருந்து 9 கடல் மைல் (சுமார் 16 கி.மீ) தொலைவில் இலங்கைக்கு கிழக்கே கடலில் மீன்பிடி நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்த போது, மீனவர் ஒருவர் சுகவீனமடைந்து ஆபத்தான நிலையில் இருப்பதாகவும், மீனவரை சிகிச்சைக்காக கரைக்கு கொண்டு வருவதற்கு கடற்படையிரை உதவுமாறு, கடற்றொழில் மற்றும் நீரியல் வளத் திணைக்களம் கடற்படைத் தலைமையகத்தில் உள்ள கொழும்பு கடல்சார் தேடல் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு நிலையத்திற்கு தகவல் வழங்கினர்.இந்த அறிவித்தலுக்கு உடனடியாக பதிலளித்த கடற்படையினர், ஆபத்தான நிலையில் இருந்த மீனவரை சிகிச்சைக்காக கரைக்கு கொண்டு வருவதற்காக கிழக்கு கடற்படை கட்டளைக்கு இணைக்கப்பட்ட கடற்படை படகொன்று கடற்பகுதிக்கு அனுப்பப்பட்டது. இதன்படி, நேற்றிரவு (01) இரவு ஆபத்தான நிலையில் இருந்த மீனவருக்கு அடிப்படை முதலுதவி அளித்து திருகோணமலை மாவட்ட பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைப்பதற்கு கடற்படையினர் ஏற்பாடு செய்தனர்.மேலும், கடற்படைத் தலைமையகத்தில் நிறுவப்பட்ட கொழும்பு கடல்சார் தேடல் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்தின் ஒருங்கிணைப்புடன், இலங்கைக்கு சொந்தமான கடல்சார் தேடல் மற்றும் மீட்பு வலயத்திற்குள் ஆபத்தில் உள்ள கடல்சார் மற்றும் மீனவ சமூகத்திற்கு நிவாரணம் வழங்க கடற்படை ஆயத்தமாக உள்ளதாகவும் கடற்படை ஊடகப்பிரிவு தெரவித்துள்ளது.

இதையும் படியுங்கள்:  யாழில் ஓய்வுநிலை ஆசிரியர் உயிர்மாய்ப்பு
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments

error: Content is protected !!