தென்மேல் பருவப் பெயர்ச்சி வலுவடைந்து காணப்படுவதன் காரணமாக நாட்டிற்கு மேலாக நிலவுகின்ற காற்றுடனான வானிலை மேலும் தொடரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் கண்டி,நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும்.
மத்திய மலைப் பிராந்தியத்தின் மேற்கு சரிவுகளிலலும், வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் திருகோணமலை, மொனராகலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்ட ங்களிலும் மணித்தியாலத்திற்கு 50 ‐ 60 km வேகத்தில் அடிக்கடி பலத்த காற்று வீசக்கூடும். நாட்டின் ஏனைய பிரதேசங்களில் மணித்தியாலத்திற்கு 30 – 40 km வேகத்தில் அடிக்கடி ஓரளவு பலத்த காற்று வீசக் கூடும்.