எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவை தேசிய மக்கள் சக்தி இன்று (20) தாக்கல் செய்தது.வவுனியா மாநகரசபை, வவுனியா வடக்கு பிரதேச சபை, வெண்கல செட்டிகுளம் பிரதேச சபை, தெற்கு தமிழ் பிரதேச சபை, சிங்கள பிரதேச சபை ஆகியவற்றில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுவை இதன் பாேது தாக்கல் செய்தது.வேட்புமனுவினை பாராளுமன்ற உறுப்பினர் செல்லத்தம்பி திலகநாதன் தலைமையில் சென்ற வேட்பாளர்கள், ஆதரவாளர்கள் முக்கியஸ்தர்கள் சகிதம் கையளித்திருந்தனர்.வவுனியா மாவட்டத்தில் உள்ள ஐந்து உள்ளூராட்சி சபைகளிலும் தேசிய மக்கள் சக்தி இம்முறை போட்டியிடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.