அகில இலங்கை ரீதியில் கடந்த வருடம் இடம் பெற்ற பாடசாலைகளுக்கு இடையிலான 19 வயது பிரிவு மாணவர்களுக்கான கர்நாடக சங்கீத போட்டியில் தேசிய ரீதியில் முதலாவது இடத்தை பெற்ற யா. அம்பன் அமெரிக்கன் மிசன் தமிழ் கலவன் பாடசாலை மாணவன் வரதகுலம் ஜக்சன் அவர்களுக்கு பாடசாலை சமூகத்தால் இன்று கௌரவிப்பு மேற்கொள்ளப்பட்டது.பாடசாலை அதிபர் குமராவேலு கண்ணதாசன் தலமையில் காலை 11:00 மணியளவில் ஆரம்பமான நிகழ்வில் முதல் நிகழ்வாக சாதனையாளன் வரதகுலம் ஜக்சன், மற்றும் விருந்தினர்கள் மலர்மாலை அணிவிக்கப்பட்டு பாண்ட் வாத்திய இசை முழங்க அழைத்துவரப்பட்டு சாதனையாளன் படம் திரை நீக்கப்பட்டதை தொடர்ந்து மங்கல சுடர்கள் ஏற்றப்பட்டது. அதனை தொடர்ந்து வரவேற்பு உரை, தலமை உரை என்பன இடம் பெற்றதை தொடர்ந்து பாடசாலை சமூகத்தால் வரதகுலம் ஜக்சன் பொன்னாடை போர்த்தியும், மலர்மாலை அணிவிக்கப்பட்டு நினைவு கேடயங்கள், பரிசில்களென்பனவும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக வடமராட்சி கல்வி வலய அழகியல் பாட உதவிக் கல்விப் பணிப்பாளர் சந்திரகுமார் கஜந்தன், சிறப்பு விருந்தினராக அம்பன் கிராம சேவகர் திருமதி துவாரகா பிரசாந், முன்னாள் பாடசாலை அதிபர் சோ.வாகீசன், பழைய மாணவர்கள், பெற்றோர்கள், மாணவர்கள், கிராம மக்கள், நலன்விரும்பிகள் என பலரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.