தையிட்டியில் சட்டவிரோத திஸ்ஸ விகாரைக்கு எதிரான போராட்டம் தொடர்ச்சியாக நடைபெற்றுக்கொண்டிருக்கும் வேளையில் அநுர அரசின் அநுமதியோடு மீண்டும் ஒரு சட்டவிரோத கட்டடம் கட்டப்பட்டு இன்று திறப்பு விழா நடாத்தப்படுகிறது.அனுமதியின்றி புதிதாக கட்டப்பட்டு இன்றையதினம் திறப்புவிழா செய்யப்படுகின்ற கட்டடத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதியில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.இந்த போராட்டத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராஜா கஜேந்திரன், காணியின் உரிமையாளர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.