Sunday, January 5, 2025
Homeஇலங்கைதொடருந்து இருக்கைகளை முன்பதிவு செய்ய NIC அல்லது கடவுச்சீட்டு இலக்கம் அவசியம்

தொடருந்து இருக்கைகளை முன்பதிவு செய்ய NIC அல்லது கடவுச்சீட்டு இலக்கம் அவசியம்

தொடருந்து இருக்கைகளை முன்பதிவு செய்யும் போது பயணிகள் தமது தேசிய அடையாள அட்டை (NIC) இலக்கம் அல்லது கடவுச்சீட்டு இலக்கத்தை உள்ளிட வேண்டும் என இலங்கை தொடருந்து திணைக்களம் அறிவித்துள்ளது.தொடருந்து நிலையத்திற்குள் உட்பிரவேசிக்கும் போதும், தொடருந்திற்குள் அனுமதி சீட்டுகளை சரிபார்க்கும் போதும், ​​அனுமதி சீட்டில் குறிப்பிடப்பட்டுள்ள தேசிய அடையாள அட்டை எண் அல்லது வெளிநாட்டு கடவுச்சீட்டு எண் ஆகியவற்றை சரிபார்த்து உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி நாளை முதல் முன்பதிவு செய்யப்பட்ட இருக்கைகளுக்கான பயணச்சீட்டு பணத்தைத் திரும்பப் பெற விண்ணப்பிக்கும் போது பயணச்சீட்டு உரிமையாளரின் அடையாளத்தை உறுதிப்படுத்த பயணிகளின் தேசிய அடையாள அட்டை அல்லது வெளிநாட்டு கடவுச்சீட்டின் நகலைத் தொடருந்து நிலையத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments