Sunday, February 23, 2025
Homeஇலங்கைநாட்டின் பல மாவட்டங்களில் வெப்ப நிலை குறித்து எச்சரிக்கை

நாட்டின் பல மாவட்டங்களில் வெப்ப நிலை குறித்து எச்சரிக்கை

நாட்டின் பல மாவட்டங்களில் மனித உடலால் உணரப்படும் வெப்பநிலையானது அவதானம் செலுத்தும் மட்டத்தில் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.வடக்கு, வடமத்திய, வடமேல், மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் வெப்பக் குறியீடானது அவதானம் செலுத்த வேண்டிய மட்டத்தில் இருக்குமென எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, மக்கள் போதுமான அளவு தண்ணீர் குடிக்கவும், நிழலான இடங்களில் முடிந்தவரை ஓய்வெடுக்குமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
மேலும், முதியவர்கள், நோய்வாய்ப்பட்டவர்கள் மற்றும் சிறு குழந்தைகளை தொடர்பில் அவதானமாக இருக்குமாறும், முடிந்த வரையில் வெள்ளை அல்லது வெளிர் நிற, இலகுரக ஆடைகளை அணியுமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது. இது தொடர்பாக மேலதிக தகவலைப் பெற்றுக்கொள்ள 011-7446491 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பு கொள்ளுமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.

இதையும் படியுங்கள்:  யாழ்ப்பாணத்தின் மரபுரிமைகளையும் பண்பாட்டையும் வெளிப்படுத்தும் முகமாக யாழ்ப்பாணத்தில் மாட்டுவண்டி பவனி
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments

error: Content is protected !!