மக்களால் முன்வைக்கப்படும் கடிதங்களுக்கு உடனடியாக பதிலளிப்பதற்காகத் தொழில் அமைச்சினால் விசேட வட்ஸ்அப் இலக்கம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.070 722 78 77 என்ற வட்ஸ்அப் இலக்கத்தின் ஊடாக தொழில் அமைச்சு மற்றும் தொழில் திணைக்களத்தில் மக்களால் முன்வைக்கப்படும் கடிதங்கள் தொடர்பில், உடனடியாக பதில் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.மக்களின் நேரம் மற்றும் செலவைக் குறைத்துக் கொள்வதற்காகவும், விரைவான பதிலைப் பெற்றுக் கொள்வதற்காகவும், அதிகாரிகளின் நேரத்தை முகாமைத்துவம் செய்து கொள்வதற்காகவும் இந்த விசேட வட்ஸ்அப் இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகத் தொழில் அமைச்சு தெரிவித்துள்ளது.