வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி கடற்படையினரால் நித்தியவெட்டை வைத்தியசாலை சுற்றுச்சூழல் நேற்று (25)துப்பரவு செய்யப்பட்டது.நித்தியவெட்டை வைத்தியசாலை வைத்தியர் Dr.யோ.திவ்யா அவர்களின் கோரிக்கைக்கு இணங்க வெற்றிலைக்கேணி கடற்படை அதிகாரி k.S.றணசிங்க அவர்களால் ஒழுங்கமைக்கப்பட்டது.வைத்தியசாலையை சுற்றி சிறந்த முறையில் சிரமதான பணியை மேற்கொண்டு குறித்த சூழலை அழகாக்கி கொடுத்த கடற்படையினருக்கு வைத்தியரால் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.