கொழும்பு தேசிய வைத்தியசாலையில் நோயாளர் ஒருவரைப் பார்வையிட பிரவேசித்தபெண்ணொருவரிடமிருந்து, சுமார் 10 இலட்சம் ரூபாய் பெறுமதியான தங்க நகைகளை கொள்ளையிட்டு தப்பி சென்றதாகக் கூறப்படும் அந்த வைத்தியசாலையின் சிற்றூழியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.குறித்த நபர், வைத்தியர் என்ற போர்வையில் தம்மை அடையாளப்படுத்தி இந்த சம்பவத்தில் ஈடுபட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது.நோயாளிக்குப் பரிசோதனை செய்ய வேண்டியுள்ளதால் அவரது நகைகளைக் கழற்றித் தருமாறு அந்த நோயாளியைப் பார்வையிட வந்த பெண்ணிடம் கூறிய சிற்றூழியர், நோயாளியின் தங்க நகைகளைப் பெற்று அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.சம்பவம் தொடர்பில் மருதானை காவல்துறையில் முன்னெடுக்கப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய, குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியதையடுத்து, அவரை எதிர்வரும் 14 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.