Thursday, March 13, 2025
Homeஇலங்கைபயங்கரவாத அச்சுறுத்தல் மிகக் குறைந்த நாடாக இலங்கை அறிவிப்பு

பயங்கரவாத அச்சுறுத்தல் மிகக் குறைந்த நாடாக இலங்கை அறிவிப்பு

உலகில் மிகக் குறைந்த பயங்கரவாத அச்சுறுத்தல்கள் உள்ள நாடுகளில் ஒன்றாக இலங்கை பெயரிடப்பட்டுள்ளது.
2024 ஆம் ஆண்டில் உலகளாவிய பயங்கரவாதத்தின் தாக்கம் குறித்து நடத்தப்பட்ட பகுப்பாய்வுகளின் அடிப்படையில், 2025 ஆம் ஆண்டுக்கான உலகளாவிய பயங்கரவாத குறியீட்டால் பட்டியல் ஒன்று வௌியிடப்பட்டுள்ளது.பொருளாதாரம் மற்றும் அமைதிக்கான சர்வதேச நிறுவனத்தினால் பயங்கரவாதத்தின் தாக்கத்தின் அடிப்படையில் நாடுகளை தரவரிசைப் படுத்துதல் இந்த உலகளாவிய பயங்கரவாத குறியீட்டால் மேற்கொள்ளப்படுகிறது.உலக மக்கள் தொகையில் 99.7 சதவீத மக்களை உள்ளடக்கிய, 163 நாடுகளுக்கு பயங்கரவாதத்தின் தாக்கத்தை பகுப்பாய்வு செய்து, உலகளாவிய பயங்கரவாத குறியீடு வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, உலகில் அதிக பயங்கரவாத ஆபத்து உள்ள நாடாக புர்கினா பாசோ முதலிடத்தில் உள்ளது, அதே நேரத்தில் பாகிஸ்தான் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது.பயங்கரவாத அச்சுறுத்தல் அதிகம் உள்ள நாடுகளில் சிரியா மூன்றாவது இடத்தில் உள்ளது.இந்தக் குறியீட்டின்படி, பயங்கரவாத ஆபத்து மிகக் குறைந்த நாடாக, உலகளாவிய பயங்கரவாதக் குறியீட்டில் இலங்கை 100வது இடத்தில் உள்ளது.2023 ஆம் ஆண்டில் இந்தக் குறியீட்டில் 36வது இடத்தில் இருந்த இலங்கை, 64 இடங்கள் பின்தங்கி, பயங்கரவாத அச்சுறுத்தல்களைக் குறைப்பதில் தெற்காசிய பிராந்தியத்தில் மிகவும் முன்னேறிய நாடாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.தெற்காசிய பிராந்தியத்தில் கடந்த 5 ஆண்டுகளில் எந்தவொரு பயங்கரவாதத் தாக்குதல்களும் பதிவாகாத நாடுகளாக இலங்கை மற்றும் பூட்டான் பெயரிடப்பட்டுள்ள நிலையில், 2019 முதல் பயங்கரவாத அச்சுறுத்தல்கள் தொடர்ந்து குறைந்து வருவதாக குறித்த அறிக்கை ஊடாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்:  இலங்கை கடற்பரப்பில் எல்லை தாண்டி மீன்பிடித்த குற்றச்சாட்டில் தமிழக மீனவர்கள் 10 பேர் கைது
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments

error: Content is protected !!