பரபரப்பான ஆட்டத்தில் நெல்லியடி மத்திய கல்லூரி ஆசிரியர்கள் அணி சம்பியன் கிண்ணத்தைச் சுவீகரித்துக் கொண்டனர்.பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரி ஆசிரியர்கள் அணி மற்றும் நெல்லியடி மத்திய கல்லூரி ஆசிரியர்கள் அணிகளுக்கு இடையிலான ரட்ணசபாபதி கிண்ணத்திற்கான கால்பந்தாட்ட போட்டி இன்று சனிக்கிழமை நெல்லியடி மத்திய கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது.இதில் முதல் பாதியாட்டத்தில் இரு அணிகளும் சம பலத்துடன் மோதினர் இதனால் இரு அணிகளாலும் கோல் எதனையும் பதிவு செய்ய முடியவில்லை. இரண்டாவது பாதியாட்டத்திலும் இரு அணிகளும் ஒன்றுக்கொன்று சளைத்தவர்கள் அல்ல என்பதை நிரூபிக்கும் வகையில் விளையாடிக் கொண்டிருந்தனர். இதனால் ஆட்ட நேரம் முடிவடையும் வரை இரு அணிகளாலும் கோல் எதனையும் பதிவு செய்ய முடியவில்லை. இதனால் சமநிலை தவிர்ப்பு உதை மூலம் வெற்றி தோல்வி தீர்மானிக்கப்பட்டது. இதில் நெல்லியடி மத்திய கல்லூரி ஆசிரியர்கள் அணி 3:0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று சம்பியன் கிண்ணத்தைச் சுவீகரித்துக் கொண்டனர்.