பருத்தித்துறை நகரசபை குடத்தனை பகுதியில் காணப்படும் விவசாய நிலங்களுக்கு நடுவில் கழிவுகளை கொட்டி வருவதால் குடத்தனை கிராமமே பாதிப்புக்குள்ளாகியுள்ளது.விவசாய நிலங்கள்,நீர்வளம்,சுற்றுச்சூழலுக்கு குறித்த கழிவுகள் பெரும் பாதிப்பை ஏற்படுத்திவருவதால் சிலருக்கு நோய் பரவிவருகின்றது.சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கிராம மக்களால் பலமுறை கோரிக்கை வைக்கப்பட்டும் எந்த வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லையென தெரிவிக்கப்படுகின்றது
இதன் காரணமாக எதிர்காலத்தில் மக்களின் விவசாய நிலங்கள் சீரழிந்து,குடிநீர் அசுத்தமாகி,மக்கள் குடியிருப்புகளில் நோய் பரவி, மக்கள் அப்பகுதியில் வாழ முடியாத சூழ்நிலை உருவாகும்.பருத்தித்துறை நகரசபையால் கொட்டப்படும் கழிவுகளில் பொலித்தீன்,விலங்கு கழிவுகள் எரியூட்டப்பட்டுவருகின்றது.இதனால் வீதிகளில் மக்கள் போக்குவரத்து செய்ய முடியாத நிலையும் காணப்படுகின்றது.சம்பவம் தொடர்பாக பிரதேச செயலர்,வடக்குமாகாண ஆளுநர்,பிரதேச ஒருங்கிணைப்பு குழு தலைவர்,சுற்றுச்சூழல் அதிகாரசபை,உள்ளூராட்சி ஆணையாளர் ஆகியோருக்கு தெரியப்படுத்தப்பட்ட போதும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லையென அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்