பிரதமர் இன்றைய தினம் கிளிநொச்சியில் அமைந்துள்ள இலங்கை ஜேர்மன் தொழிற்பயிற்சி நிலையத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்தார்.வடக்கிற்கு விஜயம் மேற் கொண்டுள்ள பிரதமர் குறித்த தொழிற்பயிற்சி நிலையத்தின் தேவைகள் மற்றும் மாணவர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் தொடர்பாக கேட்டறிந்து கொண்டார்.குறித்த விஜயத்தின் போது வடமாகாண ஆளுநர் மற்றும் கிளிநொச்சி மாவட்ட அரசாங்கதிபர், கரைச்சி பிரதேச செயலாளர் உள்ளிட்டோர் கலந்து கொண்டிருந்தனர்.