பிரதி பொலிஸ்மா அதிபர்கள் உட்பட 54 சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் இடமாற்றம்

பிரதி பொலிஸ்மா அதிபர்கள் உட்பட 54 சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.தேசிய பொலிஸ் ஆணைக்குழுவினால் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் 5 பிரதி பொலிஸ் மா அதிபர்கள் மற்றும் 35 சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, 7 பொலிஸ் அதிகாரிகள் மற்றும் 7 உதவி பொலிஸ் அதிகாரிகளும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளராக கடமையாற்றிய மகளிர் பிரிவின் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி எச்.டபிள்யூ.ஐ.எஸ்.முதுமால நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.மேலும், நுகேகொடை பொலிஸ் பிரிவுக்கு பொறுப்பான அதிகாரியாக குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் பணிப்பாளராக கடமையாற்றிய சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஈ.எம்.எம்.எஸ் தெஹிதெனிய இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here