பிள்ளையான் எனப்படும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவனேசத்துறை சந்திரகாந்தன் தலைமையிலான தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சிக்கும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் தலைமையினால் முற்போக்கு தமிழர் கழகத்துக்கு இடையில் புதிய கூட்டணிக்கான உடன்படிக்கையொன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது.எதிர்வரும் தேர்தல்களை இலக்காகக் கொண்டு கிழக்கு தமிழர் கூட்டமைப்பு என்ற பெயரிலான இந்த கூட்டணிக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மட்டக்களப்பிலுள்ள தனியார் விடுதியொன்றில் இன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது.