Friday, January 24, 2025
Homeஇலங்கைபுகைப்பிடிக்கும் பழக்கம் ஆண்களிடையே குறைந்து பெண்களிடையே அதிகரிப்பு - வைத்திய நிபுணர்கள்

புகைப்பிடிக்கும் பழக்கம் ஆண்களிடையே குறைந்து பெண்களிடையே அதிகரிப்பு – வைத்திய நிபுணர்கள்

ஆண்கள் புகைப்பிடிக்கும் வீதம் குறைவடைந்துள்ள நிலையில், பெண்களிடையே அதிகரித்து வருகிறது. இதனால் இளம் பெண்களுக்கு புற்றுநோய் ஏற்படும் அபாயம் அதிகரித்துள்ளதாக சிறுவர் சுவாச நோய் வைத்திய நிபுணர் சான டி சில்வா எச்சரிக்கை விடுத்துள்ளார்.எமது உடலில் சுவாச அமைப்பு மிகவும் முக்கியமானது. ஏனெனில், மனிதர்கள் உணவு அல்லது தண்ணீர் இல்லாமல் பல நாட்கள் வாழ முடியும். ஆனால், சுவாசிக்காமல் வாழ முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சுவாச நோய் பிரிவின் விசேட வைத்திய நிபுணர் சமன்மலி தல்பதடு தெரிவிக்கையில்,உலகளவில் இறப்புக்கான ஏழாவது முக்கிய காரணியாக நாட்பட்ட நுரையீரல் அடைப்பு நோய் (Chronic Obstructive Pulmonary Disease (COPD)) உள்ளது. இந்த நோய் நிலைமை தொடர்பில் சமூகத்தில் சரியான விழிப்புணர்வு இல்லை.இந்த நோய் பல தசாப்தங்களாக கவனிக்கப்படாமல் சிகிச்சை அளிக்கப்படாத ஆஸ்துமா அல்லது புகைபிடித்தல் காரணமாக ஏற்படுகிறது. மூச்சுத்திணறல் போன்ற அறிகுறிகள் பொதுவாக 45 வயதுக்குப் பின்னர் ஏற்படும்.

நாட்டில் 40 வயதுக்கு மேற்பட்ட 10 சதவீதம் பேர் நாட்பட்ட நுரையீரல் அடைப்பு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக 2017ஆம் ஆண்டு ஆய்வு சுட்டிக்காட்டியுள்ளது. இதற்கு குறைந்தளவிலான விழிப்புணர்வே காரணமாகும்.காற்று மாசுபாடு மற்றும் முகக்கவசங்களை அணிவதை தவிர்த்தல் ஆகியனவும் நாட்பட்ட நுரையீரல் அடைப்பு நோய் ஏற்பட காரணிகளாக அமைகின்றன. நடப்பதில் சிரமம், மூச்சுத் திணறல் மற்றும் சளி போன்ற சிறிய நோய்களுக்கு அதிக உணர்திறன் ஆகியவை அறிகுறிகளாகும்.ஆஸ்துமாவைப் போலல்லாமல், சிஓபிடி என்பது ஒரு நாட்பட்ட நோயாகும். நீண்ட காலம் இன்ஹேலர்களை பயன்படுத்துதல் முதன்மை சிகிச்சையாக உள்ளது என தெரிவித்துள்ளார்.

இதையும் படியுங்கள்:  பிரிட்டிஷ் பெண்ணிடம் கொள்ளை - ஹட்டனில் நபர் கைது
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments

error: Content is protected !!