அடக்குமுறை மூலம் தொழிற்சங்கங்களை கட்டுப்படுத்த அரசாங்கம் முயற்சித்தால், ஒட்டுமொத்த புகையிரத சேவையின் தொழிற்சங்கங்களும் ஒன்றிணைந்து போராடுவதற்கு ஒருபோதும் தயங்காது என புகையிரத நிலைய அதிபர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. புகையிரத ஊழியர்கள் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் நாசகார நடவடிக்கைகளில் ஈடுபடமாட்டார்கள் எனவும் அவர்களின் கோரிக்கைகள் உடனடியாக தீர்க்கப்படும் என நம்புவதாகவும் தொழிற்சங்கத்தின் தலைவர் சுமேதா சோமரத்ன தெரிவித்துள்ளார்.
தமது தொழிற்சங்கத்தின் நிறைவேற்று சபை இன்று (11) பிற்பகல் கூடி தமது கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் எதிர்கால நடவடிக்கை குறித்து தீர்மானிக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.